சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 15.01.2021 அன்று காலை சூளைமேடு குடியிருப்பு பகுதிக்கு சக காவல் அதிகாரிகளுடன் சென்று அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். F-5 சூளைமேடு காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், காவல் ஆணையாளர் அவர்கள் பொதுமக்களின் பொங்கல் பானையில் அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை போட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பின்னர் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், சிலம்பாட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து கண்டுகளித்தார். பின்னர் வண்ண வண்ண கோலங்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, அனைவருக் கும் சமத்துவ பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து, பாராட்டினார். பின்னர் பொங்கல் போட்டி களில் வெற்றி பெற்ற நபர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கியும், நாட்டுப்புற இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், சிலம்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், திருநங்கை குழுவினர்களுக்கு 30 மூட்டைகள் (தலா 25 கிலோ) அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கியும் வாழ்த்தினார்.
இவ்விழாவில் சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் தெற்கு ஆர்.தினகரன், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ஆர்,சுதாகர், காவல் துணை ஆணையாளர்கள் ஆர்.கிருஷ்ணராஜ், (போக்குவரத்து வடக்கு மண்டலம்) திரு.ஜி.சேசாங் சாய், (மயிலாப்பூர்), கே.அதிவீர பாண்டியன் (கீழ்ப்பாக்கம்), நுங்கம்பாக்கம் உதவி ஆணையாளர் முத்துவேல்பாண்டி, ஆய்வாளர்கள், காவல் அதிகாரிகள், சூளைமேடு திருநங்கை குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.