சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்களுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின்  நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்  துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் மன அழுத்தமின்றியும் மன  மகிழ்வுடனும் பணிபுரிய யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை  பேராசிரியராக பணிபுரியும் சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் துணைவியார் Dr. Vaneeta Aggarwal Ms.Nrithya  Jagannathan, Director of Krishnamacharya Yoga Mandiram, Ms.Rinku Mecheri, President of FICCI FLO, யோகா  பயிற்சியாளர் ஆண்டாள் ஆகியோருடன் இணைந்து காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின்  நலனுக்காக யோகா பயிற்சியினை இணையதளம் மூலமாக துவக்கி வைத்து, ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமைகளில்  யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்  ஆளிநர்களுக்கு இணையதளம் வாயிலாக யோகா மற்றும் பிராணயாமா மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. 6ம் கட்டமாக  இன்று வழங்கப்பட்ட யோகா பயிற்சியில் 1,350 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்பயிற்சியை, Dr.Vaneeta Aggarwal, காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு எந்த நேரத்திலும் பணிபுரிய ஏதுவாகவும் இந்த யோகா பயிற்சியை பிரத்தியேகமாக ஏற்பாடு செய்துள்ளார். இன்றைய பயிற்சியின் நிறைவாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் திருமதி. H. ஜெயலட்சுமி, இந்த பயிற்சியானது  பங்குபெற்ற அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக இருந்தது என்று நன்றியுரை வழங்கினார்.