சென்னை மண்டலத்தில் இ பாஸ் இல்லாமல் வாகனங்கள் இயங்கலாம் என்கிறார் கூடுதல் ஆணையர் கண்ணன்

ஷேக்மைதீன்

சென்னை மண்டலம் உள்ளே வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என
பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாதம் முழுவதும் ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசு, இம்மாதத்தின் அனைத்து
ஞாயிற்றுக் கிழமைகளிலும் எவ்வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தேவையில்லாமல் செல்லும் வாகனங்களை, போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் வைத்து தீவிர கண்காணித்து வந்தார்கள். இந்நிலையில், சென்னையில் இன்று 6ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் போக்குவரத்து தொடர்பான ஆய்வுக்கூட்டம், கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணன், சென்னை மண்டலம் உள்ளே வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் இயங்கலாம் என தெரிவித்தார். போலி  இ-பாஸ் தகவல் கிடைக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமை யாளர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் என்றும்  உறுதியளித்தார்.