விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஃபிளை துபாய் விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த ஹாஜாமைதீன், 28, மற்றும் சென்னையை சேர்ந்த புஷ்பராஜ், 28, ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஹாஜாமைதீனை சோதனையிட்டபோது, அவரது உடலில் மறைத்து வைக்கப் பட்டிருந்த நான்கு பொட்டலங்களில் 559 கிராம் எடையுடைய தங்க பசை கண்டறியப் பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 25.83 லட்சம் ஆகும். அவர் கைது செய்யப்பட்டார். புஷ்ப ராஜை சோதனையிட்டபோது, அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பொட்டலங்களில் 292 கிராம் எடை யுடைய தங்க பசை கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 13.49 லட்சம் ஆகும். மூன்றாவது வழக்கில், எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் அலி, 43, என்பவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சோதனையிட்டபோது, அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பொட்டலங்களில் 560 கிராம் எடையுடைய தங்க பசை கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 25.88 லட்சம் ஆகும். அவர் கைது செய்யப்பட்டார். மொத்தம் ரூ 65.2 லட்சம் மதிப்பிலான 1.41 கிலோ தங்கம் மூன்று வழக்குகளில் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.