பெங்களூரு, ஜூலை. 28: சென்னை தொழிலதிபர் முகமது ஷகீல் குறைஷியின் மகள் வழி பேரனும், பெங்களூரு தொழிலதிபர் சந்த் முகமத் பாரூக் குறைஷியின் மகனும், சென்னை ஹுசைன் பாஷா குறைஷி, சகோதிரின் மகனுமாகிய சந்த் முகமத் பைசான் குறைஷியின் திருமண விழா பெங்களூருவில் நடைப்பெற்றது. விழாவில், சென்னை ‘அல் மைட்டி’ நிறுவனத்தின் பங்குதாரர் அப்துல் மஜீத், கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகர் எஸ்.என். ராஜு, தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.