கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசுமேற்கொண்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில்உள்ளது. நாளை (14.6.2021) முதல் தமிழகத்தில் சென்னை உட்பட27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கஉத்தரவிடப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கொரோனாதொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையாளர்மற்றும் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர்திரு.எல்.சுப்ரமணியன், இ.ஆ.ப., தலைமையில், காவல் அதிகாரிகள்மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுடன் இன்று (13.4.2021) மாலை காவல் ஆணையரகத்தில் ஒருங்கிணைப்பு கலந்தாய்புமேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டமைப்புகளுடன் கடைகள் திறந்துநடத்திட ஆலோசிக்கப்பட்டது. இக்கலந்தாய்வில் டாஸ்மாக் கடைகளில் காவல்துறையினர்மூலம் தகுந்த தடுப்புகள் கொண்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யவும், பொதுமக்களை வரிசைபடுத்தவும், சமூக இடைவெளிகடைபிடிக்கவும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகடைபிடிக்காமல் வரும் நபர்களுக்கு, மதுபான வகைகள் வழங்கவேண்டாம் எனவும், ஒலி பெருக்கி வசதி, சில மீட்டர் தூரத்தில்பந்தல் அமைத்து மதுபானங்கள் வாங்க வருபவர்களைவரிசைபடுத்துதல் குறித்தும், நடவடிக்கை எடுக்கஆலோசிக்கப்பட்டது.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர்மற்றும் காவல் அதிகாரிகளுடன் இன்று (13.6.2021) மாலைசென்னை, 1.பெரியமேடு, ஈ.வெ.ரா.சாலை (எவரெஸ்டு ஓட்டல்எதிரில்), 2.எழும்பூர், வான்னல்ஸ் சாலை, (ஆல்பட் திரையரங்கம்அருகில்), 3. ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில்அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்றுகட்டமைப்புகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, அங்குமேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள்மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி விற்பனை செய்ய வேண்டும் எனஅறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, டாஸ்மாக் பொது மேலாளர்திரு.சுகுமாறன், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) என்.கண்ணன், இ.கா.ப., கிழக்கு மண்டல இணைஆணையாளர் எஸ்.ரஜேந்திரன், இ.கா.ப., துணைஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.