டில்லியில் பாசீச பாஜக அரசு நடத்திய இனப் படுகொலையை கண்டித்து கடந்த 15.03.2020 அன்று கோலாலம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மையில் இந்தியத் தலைநகர் டில்லியில் பாசீச பாஜக அரசு நடத்திய இனப் படுகொலையை கண்டித்து கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் முன்பு மலேசியாவில் உள்ள அனைத்து இந்திய முஸ்லிம் அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இந்திய முஸ்லிம்களுடன் மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மஸ்ஜித் இந்தியா இமாம் நாசீர் அலி, மாவார் ஆலோசகர் ஹாஜி பஷீர் அஹமது, மிம் தலைவர் சகோ ஷாபாரூடீன், மாபிம் என்ற மலாய் அமைப்பின் தலைவர் செகு அஜிஸ், மாந்தநேய திராவிடக் கழகத்தின் அன்பு இதயன், மலேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.
இமாம் நாசீர் அலி பேசுகையில், இந்திய நடுவன் அரசின் இந்த படுகொலையை மனிதனேயமிக்க யாரும் மன்னிக்க மாட்டார்கள். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை சங் பரிவார் குண்டர்களை ஏவி வன்முறை ஏற்படுத்தி மக்களை கொன்று குவித்துள்ளது. இதற்கு நிச்சயமாக நடுவன் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
மாவார் பசீர் பேசுகையில், டில்லி அரசின் இந்த நடவடிக்கை மூலம் இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முஸ்லிம்கள் அச்சுறுத்தலுக்கு ஒரு போதும் அடிபணியமாட்டார்கள். இந்திய சுந்ததிரத்திற்காக லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் உயிர் நீத்த வரலாற்றைக் கொண்ட இனம். எங்கள் இனம். மீண்டும் ஒரு சுதந்திர போரில் அஹிம்சை வழியில் ஈடுப்பட்டுள்ளனர். நிச்சயமாக இந்த போராட்டம் வெற்றி பெறும் என்றார்.
அன்பு இதயன் உரையாற்றுகையில், சுந்திர இந்தியாவில் இந்து முஸ்லிம் கிருஸ்துவர் என்ற பேதமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். பாஜக பதவி ஏற்ற பின்னர் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி இந்தியாவை படுபாதளத்தில் தள்ளியுள்ளது. அராஜக குடியுரிமை சட்டத்தை பாஜக அரசு திரும்ப பெறவேண்டும் என்றார்.
செகு அஜிஸ் உரையாற்றுக்கையில், பாசீச பாஜக அரசின் அரச பயங்கரவாத செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. மக்களையும் வழிபாட்டுத்தலங்களையும் அழித்து தீயிட்டு கொளுத்தி உள்ளது. எந்தவொரு அரசும் இதுபோன்று தம் மக்களை அழிக்கும் செயலை செய்வதில்லை. இனம் மத ரீதியாக பிளவு படுத்தும் பாஜக அரசு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இன்று உலகையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் மதம் இனம் பார்த்து வருவது இல்லை. அதற்கு நீ இந்து, நீ முஸ்லிம், நீ கிருஸ்துவன், நீ மலாய், நீ சீனா எனப் பிரித்து பார்த்து வருவதில்லை. இதனை உணர்ந்து கொண்டு பாஜக அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.