வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை யாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குழந்தை களுக்கு இலவச கட்டாய க் கல்விக்கான உரிமைச் சட்டத்தை இயற்றியது. அது, 2010 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தை களும் கல்வி பெறுவதில் சமவாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது தான் இலவச கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டம். இதன் மூலம் மாணவர் களின் இடை நிறுத்தல் பல மடங்கு குறைந்திருக்கிறது. இத்திட்ட த்தின் மூலம் அரசு பள்ளிகளில் இலவச கல்வி வழங்குகிற அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீதம் இடங்களை பொருளா தாரத்தில் வறிய நிலையில் உள்ளவர் களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. இதன்படி, தமிழக த்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீடு சரியாக பின்பற்ற ப்பட வில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் அறிக்கை தரும்படி தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர் களுக்கு 25 சதவிகித ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்து வதில் பல குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 2014 முதல் 2019 வரை 25 சதவிகித ஒதுக்கீட்டின்படி, மொத்த முள்ள இடங்களில் 70.31 சதவிகித இடங்கள் தான் நிரப் பப்பட்டுள்ளன. 30 சதவிகித இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார் கள். அதே நேரத்தில் கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக் கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டும். ஆனால் தமிழக அரசு அந்த கட்டணத்தை செலுத்துவதில் காலம் தாழ்த்துவதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே நிலுவை யில் உள்ள செலுத்த வேண்டிய தொகையை தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக செலுத்த வேண்டும்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது காலதாமதம் ஆகி வருகிறது. அதே போல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஏப்ரல் 2 இல் தொடங்கி மே 29 இல் முடிவடைந்து விடும். ஆனால் நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத் தின்படி 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குகிற மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இணைய வழி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் மாணவர்கள் சேர்க்கை காலதாமதமாவதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே, சென்னை உயர் நீதி மன்ற த்தின் அறிவுறுத்தலின்படி, தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரி வினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறை களை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.