இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக 11 மணி நேரத்தில் 46 நடிகர்கள் மற்றும் ஒரு குழந்தை நட்சத்திரத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம்.S.P.R எண்டெர் டைன்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதிதாகத் தயாரிக்கப்பட்டது. கதைச் சுருக்கம்: இந்தக் கதையானது மதுரையில் ஒரு குடும்பப் பிண்ணனியில் நடைபெறுகிறது. ஒரு நிறுவன த்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நாயகனுக்கு அவன் நண்பன் செய்த தவறான காரணத் திற்காக வேலையை இழக்கிறார் .. வேலை இல்லாமல் வீட்டில் இருந்தால் ஏற்படும் பிரச்சனை கள். அதன் காரணமாக அவன் வீட்டில் மனைவியால் மிகவும் தரக்குறைவாக நடத்தப்படுகிறான். நாயகன் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவன் சந்திக்கும் நபர்கள் மற்றும் பிரச்சனைகள் என்ன? அவன் வீட்டிற்கு வேலைக்கு வரும் வேலைக்கார பெண்ணால் அவனுக்கும் அவன் மனைவி க்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள். வேலையில் இருந்த போது அவன் நிலை வேலை இழந்த பின் அவனது நிலைமை எவ்வாறு உள்ளது. இத்திரைப்படமானது நகைச்சுவை, நட்பு, காதல் மற்றும் குடும்பப் பிண்ணனி கொண்ட ஜனரஞ்சகமான திரைப்படம். இப்படத்தின் கதாநாயகனாக P. சுந்தரபாண்டியராஜா, கதாநாயகிகளாக ஜோதிஷா மற்றும் சனிலா,குழந்தை நட்சத்திரமாக மோனிகா, சுப்பு ராஜ், சிசர் மனோகர், மொக்க மணி ஆகியோர் நடிக்கின்றனர் .
“தப்பா யோசிக்காதீங்க” படத்தின் மூலம் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர் ஸ்டெர்லின் நித்யா . ஏ.ஆர். ரகுமான் இசைப்பள்ளியில் படித்த பெண் இசையமைப்பாளார்களில் இவரும் ஒருவர். இதற்கு முன் நிறைய ஆல்பம் செய்துள்ளார் .இந்தப்படத்தில் மொத்தம் நான்கு பாடல் கள் மற்றும் பின்னனி இசையையும் இசையமைத்துள்ளார் .இப்படத்தின் முதல் பாடலான “தப்பா யோசிக்காதீங்க” பாடலை வேல்முருகன் பாடியுள்ளார் . டூயட் பாடலான “தீயே சுடும்” பாடலை மும்பை பாடகர் யாஸ்கோல்சா மற்றும் ஆலா பாடியுள்ளனார். மகாலிங்கம் அவர்கள் படத்தில் “வெளிச்சம் இல்லா” “இருவிழிஉறவினில்” என்ற இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். இதுவரை கிராமத்து பாடல்களை பாடிவந்த அவரை முதன்முறையாக இருசோகப் பாடலை பாட வைத்து ள்ளார் இசையமைப்பாளர் ஸ்டெர்லின் நித்யா. இந்தப்படமானது சென்னை வளசரவாக்கம் மற்றும் சென்னை அதன் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தணிக்கைக் குழுவி னரால் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படமானது இம்மாதம் டிசம்பர் 25-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியிடப்பட உள்ளது.
தொழிற்நுட்ப கலைஞர்கள்
எழுத்து -இயக்கம் – சுல்தான்ஸ்
ஒளிப்பதிவு – S.R.வெற்றி
இசை – ஸ்டெர்லின் நித்யா.
படத்தொகுப்பு – பிரபு மணிகண்டன்
மக்கள் தொடர்பு -செல்வரகு