தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பானவணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாகமேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்றபெருந்தொற்று ஒரளவு கட்டுக்குள் வந்திருக்கிறதுஎன்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரு நாளைக்குதொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 36,000 ஆகஇருந்தார்கள். இது 50,000 ஆகும் என்றுமருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அரசு எடுத்தபல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை15,000-க்கும் கீழ் குறைந்துகொண்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கை மிக விரைவாக குறைந்துகொண்டேவருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள்இல்லை, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்காலியாக இல்லை என்பது மாதிரியான நிலைமைஇப்போது இல்லை. கட்டளை மையம் என்ற வார்ரூமுக்கு உதவிகள் கேட்டு வருகின்ற தொலைபேசிஅழைப்புகளும் குறைந்துவிட்டது.தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகிடைக்கக்கூடிய நிலைமையை உங்களுக்கான இந்தஅரசு உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசுபல்வேறு முனைகளில் எடுத்த முயற்சிகளின்காரணமாகத்தான் இரண்டு வாரக் காலத்தில்அனைத்தும் கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறசங்கிலியை முதலில் உடைத்தாக வேண்டும்.அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தைக்கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம்.ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைபிடித்ததால்தான், இந்தஅளவிற்குக் கொரோனா பரவல் கட்டுக்குள்வந்திருக்கிறது. எனவே, விதிமுறைகளைப் பின்பற்றிநடந்துகொண்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் எனதுநெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஊரடங்கை இன்னும் ஒருவாரக் காலத்திற்குநீட்டித்து அறிவியுங்கள் என்று பொதுமக்களிடமிருந்தே கோரிக்கை வந்தது. அரசும் மக்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பதுமட்டுமல்ல, மக்களுடைய எண்ணங்களைத்தான் அரசுசெயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதைவிட வேறுஆதாரம் தேவையில்லை. என்னதான் அரசாங்கம்கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை மக்கள்பின்பற்றினால்தான் முழு வெற்றி சாத்தியம் ஆகும்.விதிகளை மக்கள் பின்பற்றுவதால்தான் தொற்றுபரவல் குறைந்தது. அதேபோன்ற எச்சரிக்கைஉணர்வோடு மக்கள் தொடர்ந்து இருக்கவேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்று தான்சொன்னேனே தவிர, முழுமையாக அதற்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்றுசொல்லவில்லை. மக்கள் மிகமிக எச்சரிக்கையாகஇருக்க வேண்டும். அரசாங்கம் எடுக்கின்றநடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அரசும், மக்களுடைய நெருக்கடியைஉணர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான் கொரோனாதொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சிலதளர்வுகளை கொடுத்திருக்கிறோம். சிலகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம்.