தமிழகம் – கேரளாவை குளிர வைக்கும், தென்மேற்கு பருவமழை துவங்கியது. அதன் அறிகுறியாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், முன்கூட்டியே மழை களைகட்டுவதால், விவசாயிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், தென்மேற்கு பருவமழை பெரும் பங்கு வகிக்கிறது.இந்த மழையால், கேரளா, கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரால், தமிழக நீர்நிலைகள் நிரம்பும். வடகிழக்கு பருவ மழையால், தமிழகத்திற்கு கூடுதல் மழை நீர் கிடைக்கும்.இந்த ஆண்டு மழைக்கான பருவக்காற்று, தென் மேற்கில் இருந்து, கடந்த வாரமே வீசத் துவங்கியது.* *அதனால், அரபிக்கடலில் உருவான, ‘டாக்டே’ புயல், குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களை புரட்டி போட்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை, இன்று அந்தமானில் துவங்க உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:* *தென்மேற்கு பருவமழை வழக்கமாக, ஜூன் முதல் வாரத்தில் தான் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்னதாகவே துவங்குகிறது.தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், தென்மேற்கு பருவமழை, இன்று துவங்க உள்ளது.மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி, நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது, புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகரலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, வடமேற்கு திசையில்,ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், தென்மேற்கு பருவமழை, கேரளாவில், வரும், 31ம் தேதிக்குள் தீவிரமடையும். அப்போது, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மழை கொட்டத் துவங்கும்.அதன்பின், கர்நாடகா, மஹாராஷ்டிரா என, வட மாநிலங்களுக்கு மழை நகரும் என்கின்றனர், வானிலை ஆராய்ச்சியாளர்கள். பருவ மழைக்கு முன்கூட்டியே, தமிழகத்தில் பல மாவட்டங்களில், நேற்று மழை களைகட்டத் துவங்கியுள்ளது. எனவே, விவசாயிகளும், மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.கோடை வெயில் கொளுத்தும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், நேற்று பரவலாக இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் மழை பெய்தது.சென்னை – சோழிங்கநல்லூரில், 4; தாம்பரம், 3; செம்பரம்பாக்கம், வில்லிவாக்கம், மீனம்பாக்கம், 2; நந்தனம், 1 செ.மீ., மழை பதிவானது. வெப்ப சலனத்தால் இந்த மழை பெய்ததாக, வானிலை மையம் தெரிவித்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், இன்று முதல், 24ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் மிதமாகவும், கடலோர பகுதிகளில் லேசானதாகவும் மழை பெய்யும்.வரும், 23, 24ம் தேதிகளில், நீலகிரியில் கன மழை பெய்யும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.தமிழக கடலோரம், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், நாளையும், நாளை மறுநாளும், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில், பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கச்சிராயபாளையத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. மதுரையில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. சென்னையில் நேற்று திடீர் மழை பெய்ததால், மதுரை மற்றும் பெங்களூருக்கு செல்லும், ‘இண்டிகோ’ விமானங்கள், மாலை, 5:50 மணிக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றன. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு, மாலை, 5:௦௦ மணிக்கு வந்த விமானம், தரையிறங்க முடியாமல், 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. பின், 5:30 மணிக்கு தரையிறங்கியது.