தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழக்த்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு (24.05.2021 – 31.05.201) முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி. பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி. காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும். தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும்