தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டிபுரம் ராமகிருஷ்ணாபுரம் டி.புதுக்கோட்டை முத்தையன் செட்டி பட்டி வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் 07.08.2020 அன்று பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். தமிழகத்தில் பருவ மழை தொடங்கிவுள்ளதால் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சிலப்பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. சிலப்பகுதி களில் பலத்த காற்றினால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்புகுள்ளாகி உள்ளன. அதில் பொட்டிபுரம் பகுதியில் 3 வீடுகளும் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 2 வீடுகளும் சேதம் அடைந் துள்ளன. டி.புதுக்கோட்டை பகுதியில் 1 கன்று குட்டி இறந்துள்ளது. முத்தையன் செட்டிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி இடிந்துள்ளது. வெம்பக்கோட்டை பகுதி யில் 1 வீடும் சேத மடை ந்துள்ளது. மேலும் சில விவசாயிகள் பயிhpடப்பட்ட வாழை பயிர்களும் பலத்த காற்றி னால் சேதம் அடைந்துள்ளது.
மேற்கண்ட பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணங்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களு க்கு அரசு சார்பிலும் நிவாரணங் கள் வழங்கிட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் எனவும் அப் பகுதி மக்களிடம் தெரிவித் தார். இந்த நிகழ்வின் போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்தி ரநாத்குமார் கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) இ.கார்த்தி காயினி உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.