தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை – நெருக்கடி நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டது

தமிழ்நாட்டின் தெற்கு கடற்கரை பகுதி மற்றும் கேரளாவுக்கு ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தேசிய நெருக்கடி நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடந்தது. அமைச்சரவை செயலாளர் இதற்கு தலைமை தாங்கினார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தலைமை செயலாளர்கள், லட்சத்தீவுகளின் ஆலோசகர் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் கொண்டனர். தங்களது மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறித்தும், மீட்புப்படைகளின் தயார் நிலை குறித்தும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தலைமை செயலாளர்கள் மற்றும் லட்சத்தீவுகளின் ஆலோசகர் தேசிய நெருக்கடி நிர்வாகக் குழுவிடம் தெரிவித்தனர். போதுமான அளவில் மீட்புக் குழுக்கள் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், தமிழ்நாட்டில் இக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தலைமை இயக்குநர் தெரிவித்தார். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், பாதிப்புகள் மிகவும் குறைவான அளவில் ஏற்படுவதை உறுதி செய்யுமாறும் மத்திய மற்றும் மாநில அதிகாரிகளை அமைச்சரவை செயலாளர் கேட்டுக் கொண்டார். தென்மேற்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்பதால், தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவுக்கு, இந்திய வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.