தமிழ்நாட்டிலேயே தடுப்பூசியினை உற்பத்தி செய்ய மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும்; டி.ஆர். பாலு; தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!

புது டெல்லி 27, மே.:- செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) – ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி,

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் பியுஷ் கோயலை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர். பாலு, தமிழக தொழித்துறை அமைச்சர், தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதி இருப்பதையும் விளக்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியிறுத்தினர்.