பொதுவாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விமர்சித்து வருகிறார். டிசம்பர் 2017-இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். என் ரசிகர்களுக்காக தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். வரும் 2021 புத்தாண்டு ஜனவரி மாதம் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் அறிவித்தார். இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது. இந்த நிலையில் சற்றுமுன்.. ரஜினிக்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள்வோம் என்று டுவிட்டரில் நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டு வருகிறார்கள்.