சென்னை, ஆகஸ்ட். 2: தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவருமான அப்துல் ரஹ்மானை, நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர். தொல். திருமாவளவன்.