தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

நாகர்கோவில், செப்டம்பர். 21: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா ஆகியோரது திருமணம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் அமைத்துள்ள இரட்சன்யா சேனை பூத் டக்கர் நினைவு பேராலயத்தில் நேற்று நடைப்பெற்றது. திருமணத்தை கர்னல் ஜான்குமார் தாசரி நடத்திவைத்தார். அதைத் தொடர்ந்து அன்று மாலை நாகர்கோவில் உள்ள லென்ஸ் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், தங்கம் குழுமத்தின் பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம், திருவிதாங்கோடு அக்ஸ்போர்ட் பள்ளி தாளாளர் அலிகான், கடலூர் சரக புள்ளியியல் இணை இயக்குனர் எஸ். ரவி, தலைமைச் செயலகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை பிரிவு அலுவலர் எம். புனிதவேல், சட்டப்பேரவை செயலக உதவி பிரிவு அலுவலர் சி. கங்கதேவன் மற்றும் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.