சென்னை, அக்டோபர். 01: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா ஆகியோரது திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கெல்லிஸில் உள்ள, பிஷப் மாணிக்கம் ஹாலில் நடைபெற்றது. நிகழ்வில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம், போக்குவரத்து காவல்துறை முன்னாள் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் மற்றும் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.