நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் ஆர். முத்தரசன் ஆகியோர் 5-3-2021 அன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழகத்தில் 6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்புராயன், மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் கோ. பழனிசாமி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.