திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இன்று (7-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 25 (இருபத்தைந்து) சட்டமன்றத் தொகுதிகளிலும் கன்னியாகுமரி (இடைத்தேர்தல்) நாடாளுமன்றத் தொகுதியும் பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் (தமிழகப் பொறுப்பு) தினேஷ் குண்டுராவ், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கழகப் மகளிர் அணிச் செயலாளரும் கழக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.