நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று (8-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் 6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சௌந்தரராஜன், பி.சம்பத் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.