திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுஇ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 21.08.2019 நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையேற்று நூலகங்களை சிறப்பு செய்தும் புரவலர்களை பாராட்டியும் நன்கொடையாள்களை கௌரவித்தும் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையில் இந்திய நூலக தந்தை தமிழகத்தை சோ;ந்த டாக்டர்.எஸ்.ஆh;.அரங்கநாதன் அவருடைய பங்கு மகத்தானது என்றும் அவருடைய கோலன் பகுப்பு முறை முக்கியத்துவம் வாய்ந்தது. அறிவியில் வளர்ச்சி சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அறிவியல் வளர்ச்சி சமூகத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக இருத்தல் கூடாது என்றும் தற்பொழுது எவை எவை தேவையோ அவைகள் எல்லாம் நமது வீடுகளில் மறைந்து விட்டன என்றும் தேவையில்லாதது எல்லாம் வீட்டிற்குள் வந்து விட்டது என்றும் வீடுகளில் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.
சோழ பேரரசு பற்றி தொpய வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் என்ற நூலை படிக்கலாம். பல்லவர்களின் ஆட்சியை பற்றி தொpந்து கொள்ள வேண்டுமென்றால் சிவகாமியின் சபதம் நூலை படிக்கலாம். இவ்வாறு பாட புத்தகம் இல்லாத பிற நூல்களை படிப்பதனால் நம்முடைய அறிவு வளரும். சமூதாயத்தை பற்றியும் வரலாற்றை பற்றியும் தெரிந்து கொள்ள இயலும். ஒருவரின் முப்பது ஆண்டு கால அனுபவத்தை ஒரு புத்தகத்தின் வாயிலாக படைக்கின்ற பொழுது அதை ஒரு சில மணிகளில் நம்மால் வாசித்து நம் வாழ்க்கைக்கு தேவையானதை கற்றுக்கொள்ள முடியும். எனவே வாசிக்க வேண்டும் வாசிப்பையே சுவாசமாக கொள்ள வேண்டும். முதல் மதிப்பெண்கள் பெறுவது மட்டும் குறிக்கோளாக இல்லாமல் சமுதாயத்தில் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தொpந்து கொள்வதற்கு நமது சந்ததியர்க்கு வழிகாட்ட வேண்டும். எதிர்கால சந்ததியர்கள் வாசிப்பு பழக்கத்தை மேற்கொண்டு வாழ்க்கை செம்மையாக்குவதற்கு நாம் எல்லோரும் வழிகாட்ட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.