திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மின்னாளுமை ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு.சந்தோஷ் கே.மிஸ்ரா இ.ஆ.ப. அவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சந்தோஷ்பாபு இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இ.ஆ.ப. அவர்கள் முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.செல்வராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் போpடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி அவர்கள் திறந்து வைத்தும் தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தும் பேசியதாவது :
தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை திறந்து வைத்து தேசிய கருத்தரங்கில் மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தெரிவித்ததாவது. தேவை மற்றும் மக்களின் கோhpக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். இ-சேவை முறையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்துடன் தமிழக அரசின் இ-சேவை மையம் தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டிற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இ-சேவை மையங்களில் பொது நிர்வாகம் வருவாய் சமூக பாதுகாப்பு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை துரிதப்படுத்தவும் மக்களுக்கு சேவைகளை விரைந்து வழங்கவும் முடியும். வருவாய்த்துறையுடன் தகவல் தொழில் நுட்பம் இணையும் பொழுது மேலும் பல வளா;ச்சிகளை தமிழ்நாடு அடையும். இ-சேவை மையங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை களைவதற்கான திட்டம் தான் இந்த ஒப்பந்தம். நிர்வாகம் மக்கள் தொகை பூலோக அடிப்படையில் மாவட்டங்களின் மக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும். தற்போது தமிழகத்தில் 85 புதிய வட்டங்கள் 11 புதிய கோட்டங்கள் 5 புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எந்த பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும் என்ற நோக்கில் 700 கோடி மக்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு இந்த கருத்தரங்கு மூலம் தொழில்நுட்ப உதவி ஏற்படும். வருங்காலங்களில் உணவு உடை இருப்பிடத்துடன் இன்டர்நெட் வசதியும் வேண்டும். அது இல்லை என்றால் கண்ணிருந்தும் குருடர்கள் போல்தான். எனவே இன்டர்நெட் இல்லை எனில் நவீன சமுதாயத்திற்குள் நாம் வர முடியாது. ஒரே நேரத்தில் 2 இலட்சம் நபருக்கு சேவை வழங்கும் நிலையில் 25 இலட்சம் பேர் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். எனவே காலதாமதம் ஏற்படுகின்றது. இவற்றை களைவதற்கு தான் இந்திய மேலாண்மை கழகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இவ்வாறு தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை திறந்து வைத்து தேசிய கருத்தரங்கில்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் தொpவித்ததாவது. திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மைக் கழகம் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நமது மாவட்டத்தில் செயல்படும் இந்திய மேலாண்மை கழகம் வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது. வரும் காலத்தில் இந்த நிறுவனம் சமுதாய சேவைகளின் அடிப்படையில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும். இந்திய மேலாண்மை நிறுவனம் தமிழக அரசுடன் சேர்ந்து மின் ஆளுமை திட்டங்களை கல்வி சுகாதாரம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்திய மேலாண்மை கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள சமுதாய நலத்திட்டங்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து தரும். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தொpவித்தார்.
தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை திறந்து வைத்து தேசிய கருத்தரங்கில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி அவர்கள் தொpவித்ததாவது. இந்திய மேலாண்மை கழகங்கள் இந்தியாவில் உள்ள சிறப்பான பட்ட மேற்படிப்பு மேலாண்மை பள்ளிகளாகும்.மேலாண்மை கல்வி வழங்குவதிலும் ஆய்வுகள் மேற்கொள்வதிலும் இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் மேலாண்மை தொடர்பான கருத்துரைகள் வழங்கி வருகின்றன. மேலும் சமுகத்தில் பின்தங்கிய வகுப்பினரை உயர்த்தும் பணியினை இந்நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. தகவல் அறிவியலில் பயனுறு ஆராய்ச்சி மையத்தினை நிறுவி வழங்குவதில் முக்கிய மையங்களில் திருச்சிராப்பள்ளி இந்திய மேலாண்மை கழகமும் (ஐஐஆ) ஒன்று. தற்பொழுது ஆன்-லைன் மூலம் கணினி பட்டா வழங்குதல் ஊரக வட்டாரங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட விவரத்தினை அவர்களே உள்ளீடு செய்ய வசதியாக இ-அடங்கல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சமூகநலத்துறையின் மூலம் திருமண உதவித்தொகை மற்றும் மாண்புமிகு முதலமைச்சரின் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பொது சேவை மையங்களில் பெறப்பட்டு வழங்கப்படுகின்றன. இணைய நிh;வாகத்தின் மூலம் வேகம் செலவுகளை குறைத்தல் வெளிப்படைத் தன்மை நேரடிபொறுப்பு ஆகிய நன்மைகள் உள்ளன.இந்த திட்டத்தின் மூலம் சாpயான நிh;வாகத்தையும் அலுவலக அமைப்பையும் உருவாக்க தேவையான கட்டுமானங்களையும் கொள்கைகளையும் ஏற்படுத்தி மத்திய மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில் பல கொள்கை முனைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தி மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மின்னாளுமை மாவட்ட திட்டம்என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கைகள் முனைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கக் கூடியதாகவும் எளிமையான வெளிப்படை தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிபடுத்துகிறது. நமது மாவட்டத்தில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அரசு கேபிள் மையங்கள் கிராம ஒழிப்பு சங்கங்கள் கிராமபுறத் தொழில் முனைவோர் மையங்கள் என 253 பொதுசேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது வருமான சான்றிதழ் சாதிச்சான்று பிறப்பிடச்சான்று முதல் பட்டதாhpச்சான்று மற்றும் ஆதரவற்ற பெண் சான்று ஆகியவை கடந்த 17.06.2014 முதல் சேவை மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. 01.04.2018 முதல் மேலும் 15 வகை வருவாய் சான்றுகளுக்கான விண்ணப்பங்கள் இ-சேவை இணையதளம் வாயிலாக பெறப்பட்டு சான்றுகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. திறந்தவழி இணையதளம் ஜுலை 2018 முதல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே எந்த நேரமும் இ-சேவை இணையதளத்தினை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்த தகவல் பரிமாற்றம் நடவடிக்கைகள் மற்றும் தனித்தனியான சேவை முறைகள் ஓருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்படுகிறது. நம் நாட்டில் மின்னாளுமையின் நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும் உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம் (2003 -2007) வழங்கிய தேசிய மின்னாளுமைத் திட்டம் (2003 -2007) வழங்கியது. எனவே அரசு இணைய மற்றும் பொது சேவை வழங்குவதில் மேலும் புதிய தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும். இதில் இடர்பாடுகளை களைய வேண்டும். இதற்கு (ஐஐஆ) இந்திய மேலாண்மை கழகத்தின் ஆராய்ச்சி பணி மேலும் சிறக்க வேண்டும். இவ்வாறு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய மேலாண்மை கழக இயக்குநர் திருமதி பீமராய மெட்ரி உட்பட பலர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.