அண்ணாநகரில் சங்கிலி பறிப்பு திருடர்கள் இருவரை மடக்கிப் பிடித்த ரோந்துவாகன காவலர் மற்றும் ஊர்க்காவல்படை வீரரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, நியூ ஆவடி சாலை, டாக்டர் அம்பேத்கர் நகர், 99வது பிளாக்கில் வசித்து வரும்பூமல்லி, பெ/வ.35, க/பெ.ராஜேந்திரன் என்பவர் நேற்று (02.6.2021) மாலை, அண்ணாநகர், A.G.பிளாக், 3வது தெரு சந்திப்பில் மினி லாரியில் மாம்பழம் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, இருசக்கரவாகனத்தில் வந்த 2 நபர்களிர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி முகவரி கேட்பது போலபூமல்லி அருகில் சென்று, பூமல்லி கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை அறுத்தபோது, தாலிக்கயிறு அறுந்து சில தங்க நாணக்குழாய்களுடன் அந்த நபர் மற்றொரு நபருடன் இருசக்கரவாகனத்தில் ஏறிச் தப்பிச் செல்ல முயன்றார். பூமல்லி சத்தம்போடவே, அவ்வழியே சென்ற பொதுமக்கள்ஓடி வரும்போது, எதிரிகள் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கார் மீது மோதி கீழே விழுந்ததால், இருவரும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பியோடினர்.
இது குறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், K-4 அண்ணாநகர்காவல் நிலைய ரோந்து வாகன பணியிலிருந்த காவலர் கோபிராஜன் (கா.52314) மற்றும்ஊர்க்காவல்படை வீரர் குமரேசன் (HG 4904) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பூமல்லியிடம் எதிரிகளின் அடையாளங்களை கேட்டு, அப்பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, எதிரிகள்இருவரையும் பிடித்து, அவர்கள் பறித்துச் சென்ற தங்க நாணக்குழாய்களை கைப்பற்றி விசாரணைசெய்தனர். விசாரணையில், பிடிபட்ட சங்கிலி பறிப்பு குற்றவாளிகள் 1.முருகன், வ/25, த/பெ.மோகன்ராஜ், 34வது பிளாக், ஐசிஎப் காலனி, அத்திப்பட்டு, அம்பத்தூர், 2.கரண்குமார், வ/20, த/பெ.சுகுமார், எண்.18/16, சபாபதி தெரு, அயனாவரம் என தெரியவந்தது. தாலிச்சங்கிலி பறித்துச் சென்றஇருவரையும் 1 மணி நேரத்திற்குள் பிடித்து, தங்க நாணக்குழாய்களை கைப்பற்றியுள்ளனர். பின்னர் இருவரையும் K-4 அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் கைது செய்யப்பட்ட முருகன் மீது ஏற்கனவே K-7 ஐசிஎப், V-4 ராஜமங்கலம், T-2 அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் T-3 கொரட்டூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டுவழக்குகள் உள்ளதும், குற்றவாளி கரண்குமார் மீது K-7 ஐசிஎப் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்குஉள்ளதும் தெரியவந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் தக்கசமயத்தில் துரிதமாக செயல்பட்டு சங்கிலி பறிப்பு திருடர்களை மடக்கிப்பிடித்த காவலர் கோபிராஜன்மற்றும் ஊர்க்காவல்படை வீரர் குமரேசன் ஆகியோரை, இன்று (03.6.2021) நேரில் வரவழைத்து, பணவெகுமதி வழங்கி பாராட்டினார்.