திருநங்கைகள் சுய தொழிலில் ஈடுபட நலத்திட்ட உதவிகளை காவல்த்துறை இணை ஆணையாளர் சுதாகர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள  திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (18.11.2020) காலை சென்னை பெருநகர காவல், எழும்பூர், கிழக்கு மண்டல இணை  ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இணை ஆணையாளர் சுதாகர் அவர்கள் கலந்து கொண்டு
திருநங்கைகள் சுய தொழில் புரிய 6 தையல் இயந்திரங்கள், 4 கேஸ் ஸ்டவ்கள், சமையல் செய்ய பயன்படும்  உபகரணங்கள், பெட்டிக்கடைக்கு தேவையான பொருட்கள், 6 தள்ளுவண்டிகள், திருநங்கைகள் சமூக அலுவலகங்களை  நடத்திட 10 கணிணிகள், சமூக பணியில் ஈடுபட்டு வரும் திருநங்கைகளுக்கு 4 லேப்டாப்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையாளர் சாமிநாதன் திருவல்லிக்கேணி காவல்.
சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர்கள், திருநங்கை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட  திருநங்கைகள் கலந்து கொண்டனர்.