திருப்பத்தூர் 27, மே.:- திருப்பத்தூர் மாவட்டத்தில்,
கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்,
நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை
ஆர்.காந்தி கலந்துக்கொண்டு அரசுத்துறை அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள், அரசுத்துறையின் அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.