திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்ததாவது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தின் உள்ள கருத்துகளை அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைமை செயலாளருடன் முதலமைச்சர் ஆலோசித்து கந்தசஷ்டி திருவிழா நடத்துவது குறித்து அறிவிப்பார் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திரைப்படங்களின் வி.பி.எப். விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வி.பி.எப். கட்டணம் அதிகமாக உள்ளது என திரையங்குகளின் உரிமையாளர்கள் தற்காலிகமாக திரையங்குகளை மூடினார்கள். அதனையடுத்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கீயூப் நிறுவன உரிமையாளர்கள். ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டு வி.பி.எப் கட்டணம் குறைக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டது. தற்போது திரைப்பட தயாரிப்பாளர்கள் வி.பி.எப் கட்டணத்தை திரையங்கு உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். திரையங்கு உரிமையாளர்கள் ஏற்கனவே உள்ள நடைமுறை படி தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்கள் இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று தீர்வு ஏற்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.