துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எம்டிஎஸ் வ் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் எம்.டி.எஸ். நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சியை தற்போது நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும். இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி தங்களது திறமையினை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
ஓவியப் போட்டியில் சர்வதேச விருது பெற்றவரும், பிளஸ் டூ தேர்வில் அமீரக அளவில் வணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற தமிழக மாணவி தஸ்னீம் அபுதாஹிர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை கட்டாயப் படுத்தக் கூடாது. அவர்களது விருப்பம் போல் திறமைகளை வெளிப்படுத்த உதவ வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சமூக சேவகி ஷர்மிளா, கில்லி எப்.எம். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜா, துபாய் சதீஷ், சிங்கை கல்வியாளர் ஷரீப், மதுரை கிரசெண்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தின் முதல்வர் முனைவர் மணிமேகலை, ஆசிரியை ஹேமா, செய்யது பாஷா, உஸ்மான், ரிபாயி சுல்தான், பேராசிரியர் முனைவர் ஹுசைன், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊடகவியலாளர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.