இந்தியா, 3 ஜூலை 2020: உலகளாவிய இசை நிறுவனமான Sony Music மற்றும் ஹைதராபாத் கிக்-ன் Knack Studios உடன் தனது ஒத்துழைப்பை அமேசான் ப்ரைம் ம்யூசிக் இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புத்தம் புதிய ஒரிஜினல் தெலுங்கு பாப் இசையை அமேசான் ம்யூசிக் வழங்குகிறது. 2020 ஜூலை முதல், இந்த தனித்துவமான இசை அனுபவம், தெலுங்கு சினிமாவின் பிரபலமான இசை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய, உயர்ந்த தரம் கொண்ட இசையை வழங்குகிறது. அவர்கள் பாப் இசையில் மிகச்சிறந்த பலவகையான தீம்களுடன் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து ஹைதரபாத் கிக் பாடல்களும் ப்ரைம் சந்தாதாரர்களுக்கென பிரத்யேகமாக முதன்முதலில் அமேசான் ப்ரைம் ம்யூசிக் தளத்தில் கிடைக்கும். இது விளம்பரங்கள் இல்லாத, வாய்ஸ் இயக்கத்துடன் கூடிய கேட்கும் அனுபவத்தை வழங்குகிறது.. அமேசான் ப்ரைம் ம்யூசிக் இயக்குநர், சஹஸ் மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது: “புதிய, அசலான தெலுங்கு பாப் பாடல்களை கண்டறிவதற்கான ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை ஹைதரபாத் கிக் வழங்குகிறது. இந்த கூட்டுமுயற்சிக்கு சோனி ம்யூசிக் நிறுவனத்தை விட சிறந்த பங்குதாரர்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அமேசான் ப்ரைம் ம்யூசிக் ரசிகர்கள் தொடர்ந்து புதிய, கண்டறியப்படாத இசையை எதிர்பார்க் கின்றனர். தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் இசை ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பிரபலமாக விளங்கும் இசையப்பாளர்களான கோபி சுந்தர், ஜிப்ரான், ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோரால் விசேஷமாக உருவாக்கப்பட்ட புத்தம் புதிய தெலுங்கு பாடல்களின் மூலம் ஹைதரபாத்ட் கிக்-ன் அசலான இசை கோர்ப்புகள், இசைக் காதலர்களை மகிழ்விக்கப் போவது உறுதி. அனைத்து ஹைதரபாத் பாடல்களும் விளம்பரங்கள் இல்லாமலும் பிரத்யேகமாகவும் முதன்முதலாக அமேசான்
ப்ரைம் ம்யூசிக்கில் கிடைக்கும்.”
சோனி ம்யூசிக் எண்டெர்டெயின்மெண்ட் நிர்வாக இயக்குநர் ராஜத் காகர்
கூறியுள்ளதாவது: “தென்னிந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய பாடல்களை ரசிகர்களுக்கு வழங்குவதே இந்த யோசனையின் நோக்கம். கலைஞர்களையும் ரசிகர்களையும் நேரடியாக
இணைக்கக் கூடிய தென்னிந்தியாவில், சுயாதீன- பாப் கலாச்சாரத்தை தொடங்க நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம். ஹைதரபாத் கிக் பாடல்கள் பிரத்யேகமாக அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில் கிடைப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இது ஒரு புதிய வகை இசையில் எழுச்சியை ஏற்படுத்தும் என்றும், அதே
வேளையில் திறமையான கலைஞர்களை அடுத்த சீசனுக்கு வர ஊக்குவிக்கும் என்றும் நாங்கள் நினைக்கிறோம்.”
தெலுங்கு பாப் இசையை மேலும் அணுகுவதற்கு எளிதான ஒன்றாக உருவாக்கு வதையும், அதே நேரம் ரசிகர்களுக்கு கண்டறியப்படாத திறமைகளை அறிமுகப் படுத்துவதையும் ஹைதரபாத் கிக் நோக்கமாக கொண்டுள்ளது. ஹைதரபாத் கிக்-ன் முதல் சீசன், பிரபலமான மற்றும் வளர்ந்துவரும் இசையப்பாளர்களான கோபி சுந்தர், ஜிப்ரான், ஜஸ்டின் பிரபாகரன், விவேக் சாகர், பிரசாந்த் விஹாரி, ஸ்ரீசரன் இன்னும் பலர்
தோன்றவுள்ள அசலான ம்யூசிக் வீடியோக்களை உள்ளடக்கியது. இந்த சீசனில் 6 பாடல்களுடன் 6 live performance வீடியோக்களும் பிரத்யேகமாக முதன்முதலில் அமேசான் ப்ரைமில் 7 நாட்களுக்கு கிடைக்கும். இத்துடன் பல வகைகளில் ரசிகர்களை கவரக் கூடிய அற்புதமான சில behind-the-scene வீடியோக்களும் இணைக்கப் படுகின்றன.
சோனி ம்யூசிக் தென்னிந்திய தலைவர் அசோக் பர்வானி கூறியுள்ளதாவது: “இசைத்
துறை கலைஞர்களான கோபி சுந்தர், ஜிப்ரான், ஜஸ்டின் பிரபாகரன், இன்னும் பல பிரபலமான இசையமைப்பாளர்களை ஹைதரபாத் கிக் உள்ளடக்கியது. வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் ஒன்றிணைந்து தனித்தன்மை வாய்ந்த பாடல்களை உருவாக்க இது ஒரு சிறப்பான நடவடிக்கையாகும். ஒரு இசை நிறுவனத்துக்கு, குறிப்பாக இது போன்ற கடினமான சூழலில், புதிய இசைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவது மிக முக்கியமானதாகும். இந்த தளத்தில் சிறந்த தெலுங்கு பாப் இசைப் பாடல்கள் அதிகமாக வெளிவரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்”.
Knack Studios-ன் தலைவர் மற்றும் நிறுவனரான எல்.ஹெச். ஹரீஷ் ராம் கூறியுள்ளதாவது: சுயாதீன இசைக்கு உலகளாவிய தளத்தை வழங்குவதில் Knack Studios எப்போதும் ஆர்வம் கொண்டுள்ளோம். அந்த கனவை நனவாக்குவதில் ஹைதரபாத் கிக் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். சோனி ம்யூசிக் நிறுவனத்துடனான இந்த கூட்டுமுயற்சி மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அவர்கள் கலைஞர்களுக்கான சரியான இடத்தை வழங்குகிறார்கள். அதே நேரத்தில் நாங்கள் சிறந்த இசையை வழங்குகுவதன் மூலம் ஒரு உலகத்தரமான படைப்பு உறுதி செய்யப்படுகிறது. ” இந்தி மற்றும் பஞ்சாபிக்கு பிறகு, ஆடியோ மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழி தெலுங்கு, இதன் மூலம் மிக அதிகமான ரசிகர்களை அடையும் வாய்ப்பு கிடைக்கிறது. அதீத திறமை வாய்ந்த, அத்திறமைகளை வெளிக்கொணர சரியான ஒரு தளத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஏராளமான கலைஞர்கள் தென்னிந்தியாவில் இருப்பதாக நம்புகிறோம். ஹைதரபாத் கிக் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 3 2020 அன்று வெளியிடப்படும். பாடல்கள் வரும் ஜூலை 9ஆம் தேதி முதல் வெளியாகத் தொடங்கும்.
அமேசான் ப்ரைம் ம்யூசிக் குறித்து: லட்சக்கணக்கான பாடல்கள், நூற்றுக்கணக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ளேலிஸ்ட்கள், மற்றும் ஸ்டேஷன்களை தங்களின் குரல் களால் இயக்கவைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இசை கேட்டல் குறித்த ஒரு புதிய பிம்பத்தை உருவாக்குகிறது. அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில் புதிய வெளியீடு களையும், பழைய தரமான பாடல்களையும் விளம்பரங்கள் இல்லாமல், எல்லை யில்லாமல் ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட், டெஸ்க்டாப், ஃபயர் டிவி, எகோ இன்னும் பலவற்றிலும் கேட்கலாம். அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில், வருடாந்திர சந்தா ரூ. 999/- மற்றும் மாதந்திர சந்தா 129/- ஆகியவற்றின் மூலம் ப்ரைம் சந்தாதாரர்கள் எந்த வித கூடுதல் தொகையுமின்றி ப்ரைம் பலனை விளம்பரங்கள் ஏதுமில்லாமல் கேட்க முடியும். சர்வதேச மற்றும் இந்திய இசை நிறுவனங்களில் உள்ள இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மற்றும் பல்வேறு இந்திய மொழிகள் சார்ந்த 6 லட்சம் பாடல்கள் அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில் இடம்பெற்றுள்ளன. இசையில் மூழ்குவது இதைவிட மிகவும் இயல்பானதாக, எளிமையானதாக, மகிழ்ச்சிகரமானதாக எப்போதும் இருந்திருக்காது. மேலும் தகவல்களுக்கு
www.amazon.in/amazonprimemusic என்ற இணையதள முகவரியை பார்க்கவும் அல்லது அமேசான் ப்ரைம் ம்யூசிக் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.