தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15.08.2020 அன்று நடைபெற்ற 74-வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று வண்ண பலூன்களை பறக்க விட்டு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த
மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் வருவாய் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 1952 நபர்களுக்கும் மற்றும் காவல்த்துறையை சேர்ந்த 2700 நபர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவிப்பதற்கு ஏதுவாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அந்தந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலம் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி இ.கா.ப. மாவட்ட வன அலுவலர் எஸ். கௌதம் இ.வ.ப. மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஞ.தாக்ரே சுபம் இ.ஆ.ப. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி பெரிய குளம் சார் ஆட்சியர் டி.சிநேகா இ.ஆ.ப. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.இளங்கோ மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெ.கவிதா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.ராஜா உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.