இராமநாதபுரம், ஜூலை. 26: தொண்டி பேரூராட்சியில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழக மாவட்ட கழக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.