இராமநாதபுரம், டிசம்பர். 24: தொழிலதிபர் முகமது பஸ்ஸாம் மற்றும் செய்யத் முகமது இர்ஷாத் ஆகியோரது இல்லத் திருமணவிழா நேற்று கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில், தொழிலதிபர் சலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் துணைத் தலைவர் மற்றும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்கம் முஹைதீன், சதக் கல்லூரி குழுமத் தலைவர்
யூசுஃப் சாஹிப், துபாய் தொழிலதிபர் பி.எஸ்.ஏம். ஹபிபுல்லாஹ் கான், துபாய் அலைட் மோட்டார்ஸ் முதன்மை செயல் தலைவர் எ.ஜே.கமால், துபாய் ரேடியான்ட் ஸ்டார் நிர்வாக இயக்குனர் ஆபித் ஜுனைத், மெரினா மால் முதன்மை செயல் தலைவர் முக்ரிம்.
அமீரக காயிதே பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி, துணைத் தலைவர் திருப்பனந்தாள் முகமது தாஹா, தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம், மேலப்பாளையம் காஜா முகைதீன், கீழக்கரை ரிஃபாய், மற்றும் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.