நடிகர் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், “அன்புள்ள ரஜினிகாந்த், உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். நீண்டகாலத்துக்கு ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெற்று வாழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நடிகர் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், “தனது அயராது உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ எனது இதயமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.