நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதற்கு இது போன்ற தகவல் விழிப்புணர்வு முகாம்கள் அவசியம். ஒருநாட்டின் வளர்ச்சி என்பது தனிமனித வளர்ச்சி மற்றும் கிராம வளர்ச்சியை சார்ந்தே இருக்கும். எனவே தனிநபர்ஒவ்வொருவருக்கும் அரசு திட்டங்களின் பலன்கள் கிடைத்தாக வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியர் திரு ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.

இந்திய அரசின் புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பகம் இன்று சின்னசேலம் ஒன்றியம் அம்மையகரம்கிராமத்தில் நடத்திய ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாமைத் துவக்கி வைத்து உரையாற்றிய போது அவர்இவ்வாறு தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட சமூகநல அலுவலகம், சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த முகாம்நடைபெற்றது.

ஒவ்வொருவரும் ஆரோக்கியம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நலம்தான் அனைத்துக்கும் அடிப்படை. உடலநலத்தைப் பேண சத்தான சமச்சீரான உணவு அவசியம். சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி கண் போன்றது. பெண் குழந்தைகளை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். பெண்ணுக்கு மரியாதையும் கௌரவமும் கல்வி மூலமே கிடைக்கும்என்று ஆட்சியர் திரு ஷ்ரவன்குமார் ஜடாவத் மேலும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு சின்னசேலம் ஒன்றியக் குழு தலைவர் திரு.மா.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியக் குழுதுணைத் தலைவர் திரு..வி.அன்புமாறன், அம்மையகரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.வி.சிவஞானம்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சு.ராஜா, மாவட்ட சமூகநல அலுவலர் திருமிகுசெ.தீபிகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் திருமிகு..செல்வி ஆகியோர்கருத்துரை ஆற்றினர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் திரு..ஜெகந்நாதன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமிகுமா..நிரஞ்சனா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் .மதியழகன், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் திருமிகுசின்னப் பொண்ணு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் திரு ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் பாஞ்ச் பிரான் மற்றும் பெண் குழந்தைகளைகாப்போம் உறுதிமொழிகளை பங்கேற்றோர் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் முனைவர் தி.சிவக்குமார் வரவேற்புரைஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவி அலுவலர் திரு சு.வீரமணி நன்றி கூறினார்.

 ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் மகாபாரதி பொறியியல் கல்லூரியில்நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

 தேசிய குடற்புழு நீக்க முகாமையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் திரு ஷ்ரவன்குமார் ஜடாவத்அல்பெண்டோசல் மாத்திரைகளை வழங்கினார். இறுதியில் ஆத்தூர் வெங்கடேஷ்வரா நாட்டுப்புற கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.