தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், 29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறை வாசிக்கும் ஏற் பட்டப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை முயற்சியில் ஈடு பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி, அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் யார்? என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படவேண்டும் என வற்புறுத் துகிறேன். உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நளினியை சந்திக்கவும், ஆறுதல் கூறவும் அவரு டைய கணவர் மற்றும் குடும்பத்தினரை அனுமதிக்குமாறு அரசை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.