ஆரம்ப காலத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சுருக்கமாக எம்.கே.டி.என்ற திரு.எம்.கே .தியாகராஜர் பாகவதர், திரு.பி.யூ சின்னப்பா, கலைவாணர் திரு. என்.எஸ். கிருஷ்ணனுக்கு பிறகு தமிழ் சினிமாவின் பெருமைகளை யார் தூக்கி நிறுத்துவார்கள் என்ற காலத்தில் கருத்தாழ மிக்க வசனத்தின் எழுத்தாற்றலால் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் திரும்பி பார்க்க வைத்த கலைஞர், திரு.மு.கருணாநிதி, நடிகர்கள் மக்கள் திலகம், திரு.எம்.ஜி.ஆர். நடிகர் திலகம், திரு.சிவாஜிகணேசன், காதல் மன்னன் திரு.ஜெமினிகணேசன், நடிகவேல் திரு.எம்.ஆர்.ராதா, திரு.கே.ஆர்.ராமசாமி, இலட்சிய நடிகர் திரு.எஸ்.எஸ்.ஆர். திரு. எம்.என். நம்பியார், திரு.பி.எஸ். வீரப்பா, மக்கள் கலைஞர் திரு.ஜெய் சங்கர்,திரு. ரவிச்சந்திரன், திரு.முத்துராமன், திரு. கல்யாண்குமார், திரு.நாகேஷ், திரு.சோ, திரு.வி.கே.ராமசாமி, கலையுலக மார்க்கண்டேயர் திரு.சிவக்குமார் உட்பட எண்ணற்றவர்கள் தமிழ் சினிமாவால் கண்டெடுக்கப்பட்ட மகா வசூலின் சினிமாவை வாழவைத்த முத்துக்கள் என்று கூட இவர்களை பற்றி கேள்விபட்டிருப்போம்.
பெரிய விஞ்ஞான வளர்ச்சி இல்லாத கால கட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய கதாப்பாத்திரங்களை உணர்ந்து நடிப்பு, வசன உச்சரிப்பு,பாடல் காட்சிகளில் நடித்தார்கள் என்று சொல்வதைவிட இன்று வரை இவர்கள் அனைவரும் மக்களின் மனதில், பலரும் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்று சொன்னால் அது மிகையாகது. என் சிறு வயது முதல் என்னைப்போல், பலர் பார்த்து ரசித்து, நேசித்த சினிமாவின் நாயகர்களில் பலரை பெரிய திரையில் பார்த்த நான் அவர்களால் திரையுலகம் மகிழ்ச்சியோடு வசூலில் வாரிகொட்டோ, கொட்டு என்று கொடிகட்டி பறந்த பொற்காலமுண்டு என்று சொன்னால், மறக்க முடியாது.
மேற்குறிப்பிட்டவர்கள் போல நூறு படங்களை கடந்த வெற்றி நாயகர்களும் உண்டு அது பெரிய சாதனை என்று கூட சொல்லலாம். காரணம் இதெல்லாம் சினிமாவின் வாழ்வை மெருகேற்ற பயன்பட்டது. இவர்களோடு அந்த,அந்த காலகட்டங்களில் வந்த நாயகர்களும் திரையுலகை வசூலில் வாரி அலங்கரித்தார்கள் என்று சொன்னால் அதுவும் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடித்தும் இன்றும் ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த், கலைஞானி திரு.கமல்ஹாசன், கேப்டன் திரு.விஜயகாந்த், புரட்சித் தமிழன் திரு.சத்தியராஜ், இளைய திலகம் திரு.பிரபு, திரு.கே.விஜயன், திரு.சுதாகர், மோகன், அழகான நாயகன் திரு.எம்.கார்த்திக், சூப்ரீம் ஸ்டார் திரு.சரத்குமார், திரு.ராதாரவி, வாகை சந்திரசேகர், திரு. அர்ஜுன், திரு. அருண்பாண்டியன்,
மக்கள் நாயகன், திரு.ராமராஜன், திரு.நாசர், திரு.பிரசாந்த், திரு.விக்ரம்,, திரு.நெப்போலியன்
மற்றும் மறைந்த திரு.முரளி, திரு.ரகுவரன், திரு.விசு இவர்களுடைய படங்கள் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி மேற்குறிப்பிட்ட நடிகர்களின் படங்களை ஆவலோடு கூடிய எதிர்பார்ப்புகள் இன்றளவும் ஜொலித்து கொண்டிருப்பவர்கள்.
சினிமாவை இணைந்து அலங்கரித்து வாழ வைக்க காரணமாக இருந்தவர்களில் தானே இயக்கி நடித்து தென்னிந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயர் பெற்ற நடிகர் திரு.கே.பாக்கியராஜ், இவர் படம் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்போடு அந்த படத்தின் செட்டை பார்க்க இருந்த பெரும் கூட்டம் அவர் தான் நாயகர் திரு. டி.ராஜேந்தர்எம்.ஏ.,
போன்ற இன்னும் பலரின் திறமைகளால், வெற்றியையும், வெள்ளி விழாவையும் செழித்தோங்க செய்தார்கள். அதன்பின் அடுத்த தலைமுறை என்று எடுத்து கொண்டால், திரு.விஜய், திரு.அஜித்குமார், திரு.சூர்யா, திரு.டி.ஆர்.சிலம்பரசன், திரு.பிரபுதேவா திரு.மாதவன் திரு.தனுஷ், திரு.விஷால்,, திரு.ஜெயம் ரவி, திரு.ஸ்ரீகாந்த் திரு.கார்த்திக், திரு.ஜீவா, திரு.ஆர்யா, திரு.சிவகார்த்திகேயன், திரு.விஜய்சேதுபதி, திரு.உதயநிதி ஸ்டாலின், திரு.அருண்விஜய், திரு.ஜி.வி.பிரகாஷ், திரு.விமல், திரு.விஜயபிரபாகரன், திரு.ஜெய், திரு.பிராகாஷ் ராஜ்
திரு.சமுத்திரக்கனி போன்ற இன்னும் பிற நாயகர்களும், பிரபல திறமையான நாயகிகளும்திரு.கவுண்டமணி, திரு.செந்தில் , திரு.வடிவேலு, திரு.விவேக், திரு.சந்தானம், திரு.சூரி, யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரோபோ சங்கர் உட்பட இதில் விடுப்பட்ட பல திறமைசாலிகளாலும் தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க, சிந்திக்க வைத்து மகிழ்வித்த இந்த சினிமாவிற்க்கு 2020 ம் ஆண்டும், 2021 ம் ஆண்டும் கடுமையான சோதனையான காலக்கட்டம் என்றேசொல்லலாம் ஆம்.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா படங்கள் வெளி வந்து கொண்டிருந்த நேரத்தில் தான் கடந்த வருடம் படுபாதகான கொரானா 19 என்ற பெயரில் வந்த விஷக்கிருமி வில்லனால் ஒட்டுமொத்த திரைத்துறை மட்டுமன்றி பல உலக நாடுகளையும் சுனாமியைப் போல் பல தொழில்களில் சினிமாவையும் கடுமையாக புரட்டிப்போட்டது. இன்று வரை தொடர்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களால் செவ்வனே
தொடங்கி வைக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் அம்மையார். செல்வி ஜெ.ஜெயலலிதா
அவர்களின் அரசின் மூலமாக மாண்புமிகு முன்னாள் முதல்வர் அண்ணன். எடப்பாடி திரு.கே.பழனிச்சாமி அவர்களும், மாண்புமிகு முன்னாள் துணைமுதல்வர் அண்ணன் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களும் இணைந்து திரைத்துறைக்கு அரசின் நலவாரியம்
மூலமாக கொரோனா பேரிடர் காலத்தில் சில உதவிகளை செய்து கொடுத்தார்கள்.
அதைப்போலவே திரைத்துறை உள்ள பிரபல நட்சத்திரகள் முதற்கொண்டுஅது சம்பந்தப்பட்ட தொழிற் நுட்ப கலைஞர்கள் சிலரும் தங்களால் முடிந்ததை 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் முழுவதும் செய்தார்கள். இது நீண்ட நெடிய காலம் செல்லும் என்பதால் தொடர்ந்து
இயன்றவர்களுக்கும் தொழிலில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்களும் என்ன தான் செய்வார்கள் அவர்களை சுற்றியிருக்கும் பலருக்கு இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமல் செய்து கொண்டு தான் இருந்தார்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அனைவரையும் ஒரே மாதிரியாக புரட்டி போடும் என்று தெரியாது அல்லவா..?சரி
நண்பர்களே விஷயத்துக்கு வருவோம்,
இவ்வளவு பெரிய சினிமாவின் நிலைமை என்ன தெரியுமா ஒ.டி.டி.( OTT) என்னும் புதிய தொழில் நுட்பத்தின் மூலமாக நேரடியாக ரீசார்ஜ் செய்து வீட்டிலிருந்த படியே புதிய படங்களை நேரடியாக பார்த்து கொள்ளலாம். இதைப் போன்ற இக்காட்டான சூழ்நிலையில் அது கை கொடுத்திருக்கலாம், தவிர நீண்ட நெடிய பயணத்துக்கு பலன் தருமா தராதா என்பது ரசிகர்களிடமும், மக்களின் கையில் தான் உள்ளது. உதாரணமாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் (2020) முழுவதும் முழுமையான லாக் டவுன் கொண்டு வந்த போது அப்போது பல்வேறு தொலைக் காட்சிகளும் தாங்கள் உரிமைப்பெற்ற பழைய, புதிய திரைப்படங்கள் அனைத்தையும் இடைவெளி இல்லாமல் வெளியிட்டார்கள். மக்களும் தங்களுக்கு தேவையான பிடித்த படங்களை பார்த்தார்கள். லாக் டவுன் முடிந்தது. மீண்டும் தியேட்டர்கள் திறக்கபடுமா என்ற
எதிர்பார்ப்புகள் ரசிகர்களின் மத்தியில் ஏற்பட அப்போது ஒடிடி (OTT) மூலமாக நீங்கள் நேரடியாக உங்கள் வீட்டிலிருந்தபடியே சினிமாவை குறைந்த கட்டணத்தில் பார்க்கலாம். என்றவுடன் ரசிகர்களிடம் மக்களிடம் ஒரு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ரசிகர்களும், மக்களும்
தாங்கள் விரும்பிய நடிகரின் படத்தை உடனடியாக பார்க்க போகிறோம் என்று நினைத்தார்கள், உண்மையான ஓன்று தான். ஆனால் தியேட்டரில் பார்ப்பது போல்,வீட்டில் உட்கார்ந்து ரசித்தார்களா என்றால் அதற்கான விடையை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்களுடைய எதிர்பார்ப்புகள் எந்தளவுக்கு இருந்தது என்று தெரியவில்லை. எப்பொழுதுமே ரசிகர்கள் தங்களுடைய நாயக நடிகர் புதுப்படம் வெளி வரும் பொழுது ஒப்பனிங் கிளாப்ஸ்,என்று திரையரங்களில் சொல்வார்களே (கைதட்டல்,விசில் சத்தம்) அதற்கு அவர்களுக்கு வீட்டில் வழியில்லை.
பெரிய திரையில் பார்ப்பதை போன்ற கனவு அவர்களுடைய எதிர்பார்ப்புகள்பூர்த்தியாகவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. டால்பி ஸ்டிரியோ ஸிஸ்டத்தை தியேட்டரில் அனுபவிப்பதைப் போல வீட்டில் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தங்களுக்கு பிடித்தமான நொறுக்கு தீணிகளான பாப்கார்ன், சமுசா, பப்ஸ் டீ, காபி, கூல்டிரிங்கஸ் உட்பட பல்வேறு தேவைகளை தங்களால் எடுத்து கொள்ள முடியாதை உணர்ந்ததால் தான் என்னவோஅவர்களுக்கு திரையரங்குகளில் கிடைத்த சகல விதமான வசதிகள்
எதிர்பார்ப்புகள் குறைந்தது போல மன நிலைக்கு வந்து இருப்பதாக சினிமாவை ரசிக்கும் ரசிகர்களிடம் தெரிய வருகிறது. இதற்காகதான் அப்பொழுதே பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகர்களின் மன நிலையின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அவர்களின் விருப்பமே நம்முடைய விருப்பம் என்று சென்னை அபிராமி மெகா மால் உரிமையாளர் திரு.அபிராமி ராமநாதன் தன்னுடைய திரையரங்குகளில் பல புதுமைகளை ரசிகர்களுக்காவும், பொதுமக்களுக்காவும் செலவுகளை பாராமல் செயல்படுத்தினார்கள். அதில் சில;
முதன் முதலில் கம்ப்யூட்டர் மூலம் டிக்கெட் முன் பதிவை (ரிசர்வேஷன்) தொடங்கியது.கியூ வரிசையில் நின்று டிக்கெட் வாங்காமல் டயல் ஏ புக்கிங் போனில் அழைத்து சொன்னால் போதும் வீடு தேடி டிக்கெட் வரும் முதன் D T S.என்ற சவுண்ட் சிஸ்டத்தை அறிமுக படுத்தி கொண்டு வந்தபோது கலைஞானி கமலஹாசனும்-ஆக் ஷன் கிங் அர்ஜுன் நடித்து வெளிவந்த குருதிப்புனல் என்ற படத்தை அபிராமியார் வேண்டுகோளையும், ரசிகர்களின் அந்த காலக்கட்டதிற்க்கான மன நிலையை புரிந்து கொண்டு கலைஞானி கமலஹாசன் அவர்கள் சொந்த படத்தை டி டீ எஸ் படமாக மாற்றி ஒட்டுமொத்த ரசிகர்களின் அமோக வரவேற்பு
கிடைத்து இருக்கிறது. ஏ.வி.எம்.அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த, சூர்யா-ஜோதிகா நடித்த பேரழகன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த டிஜிட்டல் முறையில் வெளிவந்த முதல் திரைப்படம் என்ற பெயரை பெற்றது. இந்த D T S.சவுண்ட் சிஸ்டம் பல தியேட்டர்களில் விரிவு படுத்தப்பட்டது.பெற்றோர்கள் குழந்தைகளோடு வரும் பொழுது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய வகையில் மீண்டும் செல்லலாம என்று குழந்தைகள் கேட்கும் வகையில் அவர்கள் என்ன என்னவெல்லாம் விளையாடுவார்களோ அத்தனையும் திரையரங்கில் கொண்டு வந்தது.
திரையரங்கில் படுத்து கொண்டே படம் பார்ப்பது அவர்கள் படம் பார்த்து கொண்டே இருக்கும் போதே படம் பார்த்து கொண்டிருப்பவர் தங்களுடைய இருக்கையில் இருந்து பெல்லை அழுத்தினால் தியேட்டர் ஊழியர்கள் அவர்களின் அருகில் வந்து விரும்பிய உணவு
பொருட்களை ஆர்டர் எடுத்து கொண்டு வந்து கொடுப்பது. இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ரசிகர்களுக்காகவும், பொது மக்களுக்காகவும், திரு.அபிராமி ராமநாதன், திருமதி. நல்லம்மை ராமநாதன் அவர்களும் இணைந்து அறிமுகபடுத்திய நல்ல விஷயங்களை பல தியேட்டர் அதிபர்களும் நமக்கு ரசிக மக்கள்தான் முக்கியம் செலவுகளை பார்க்கமால் செயல் படுத்தினார்கள் என்றே சொல்லலாம். எதற்காக இதை பதிவு செய்தேன் என்றால் ரசிகர்களும், பொது மக்களின் ரசனையும் தான் மிக மிக முக்கியம்.
ஒரு காலக்கட்டத்தில் நாடகங்கள் பிரபலமான முறையில் சென்று கொண்டிருந்தன. ஆனால் இன்றைய நிலைமையோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நம்முடைய நடிகர்கள்
திரு.ஒய்.ஜி.மகேந்திரேன், திரு.எஸ்.வி.சேகர் போன்ற வெகு சிலரே ஆன்லைன் மூலமாக நடத்தி கொண்டிருக்கிறார்கள். நாடகக்கலையை மக்கள் மறந்து விடக்கூடாது என்று லாபம் இருக்கோ, இல்லையோ நடத்தி கொண்டிருக்கிறார்கள். நாடகம் போல ஆகிவிடக்கூடாது கடந்த வருடம், இந்த வருடம் எத்தனையோ படங்கள் அதிக, குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட படங்களும் வெளியீட்டுகாக காத்து கொண்டிருக்கின்றன. சினிமாவில் பல அமைப்புகளின் தொழிலாள
நண்பர்கள் கொரான வில்லனால் வேலை வாய்ப்பை இழந்து நிற்கிறார்கள். இந்த தொழிலை மட்டுமே நம்பி வந்தவர்கள் இந்த தொழிலைவிட்டு செல்ல மாட்டார்கள். வாழ்ந்தாலும் சரி, என்ன நடந்தாலும் தாங்கி கொண்டு அற்புதமான முறையில் வாழ்பவர்கள் இந்த கலைத்துறை மட்டுமே உண்டு. பலப்படங்கள் பாதியிலேயே, முக்கால் வாசியிலேய நிற்கின்றன.
கொடுத்தவர்களும், வாங்கியவர்க்ளும் விழிபிதுங்கி கொரானா என்ற வில்லனால் மாட்டிக்கொண்டு நிற்கிறது.
நாடகமும்,சினிமாவும் வாழ வேண்டும் ரசிகர்களுக்கும்,மக்களுக்கும் பெரும் பொழுது போக்குக்கு இயற்கை வழிவகை செய்ய அந்த நாட்களை வெகு விரைவில் எதிர்பார்ப்போம்.பல லட்சக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கொடுத்து வாழ வைத்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படப்பிடிப்புகள் முழுமையான முறையில் தொடர்ந்து நடத்தவும், திரைப்படங்களை நேரடியாக திரையரங்குகளில் வெளியிடவும் அதன் மூலமாக அரசுக்கு நேரடி வரி வருவாய் கிடைத்திடவும் நம்முடைய திரையலக பிதாமகர் ,சினிமாவே தன்னுடைய உயிர் மூச்சு என்று வாழ்ந்த அய்யா, கலைஞர், திரு.மு.கருணாநிதி அவர்களின் ஆசியுடன் பொறுப்பேற்றிருக்கும் நம்முடைய முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் கொரானா 19 என்ற பாதிப்பினை
முற்றிலுமாக வெற்றிகரமாக அழித்து, ஒழித்து மக்களை நிம்மதியாக வாழ வைத்து விட்டு,நாடகத்தையும், சினிமாவையும் மீண்டும் செழிப்பாக வாழ்விக்கும் காலமும்நம்முடைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மூலமாக கனியும் என்றே உங்களைப்போல் அந்த நன்னாளை எதிர் நோக்கி ஆவலோடு நாமும் காத்து கொண்டிருக்கிறோம்.