பிரபல நடன இயக்குனர்கள் தங்கப்பன், பிரபுதேவா , ராஜு சுந்தரம், ராகவா லாரன்ஸ், தினா, அரிக்குமார், ஆகியோரை தொடர்ந்து மாஸ்டர் மஸ்தானும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் . தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 500 படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல் களுக்கு நடனம் அமைத்தவர் மாஸ்டர் மஸ்தான். இவர் இயக்கும் மூன்றாவது படத்தின் பெயர் தான் ” பட்டைய கிளப்பு ” .படத்தைப் பற்றி மாஸ்டர் மஸ்தான் கூறிய தாவது, ” படித்த நான்கு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பிரச்சனைகளில் முடிகிறது. ஊரில் இவர் களுக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் நால்வரும் கூடி பேசி இவர்களுக்குமுன்னால் பணம் சம்பாதித்து உதாசீனப்படுத்திய அந்த ஊருக்குள் வந்து இளைஞர்களாகிய எங்களாலும்சாதிக்க முடியும் என்று நிரூபிப்பபதுதான் கதையின் களம். இதில் உமா ராமசந்திரன் தான் பட்டைய கிளப்புற ரோல்ல முக்கிய வேடத்தில் கலக்க போறாங்க” என்று கூறினார்.
நான்கு மொழிகளில் இருந்து நால்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதில் கேரளா வில் உள்ள கல்லூரிமாணவி சித்ரா ஒரு நாயகியாக அறிமுகமாகிறார். பெங்களூர் மாடல் அழகி லட்சுமி பாலா, திருச்சியை சேர்ந்தகல்லூரி மாணவி தீபிகா . சிங்கம் புலி , இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, விஜய் கணேஷ், கிங்காங், நேகா, போண்டா மணி, வெங்கல் ராவ், சுப்புராஜ் இவர்களுடன் முத்தின கத்திரிக்கா, நான் பேய் பேசுறேன், வெட்டிபசங்க படங்களில் கேரக்டராகவே வாழ்ந்து அசத்திய உமா ராமச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னும் ஒரு கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது. அடுத்த மாதம் சென்னையில் படப்பிடிப்பு துவங்கி பழனி, ஏற்காடு, சாலக்குடி ஆகிய இடங்களில் இடைவிடா மல்நடைபெற்று மே மாதம் திரைக்கு வர உள்ளது “பட்டைய கிளப்பு.” பிறைசூடன், சினேகன், சொற்கோ, கானா தாஸ் நால்வரின் பாடல்களுக்கு தயாபிறை சூடன் இசை யமைக்கிறார். ஆர். வேல் ஒளிப்பதிவு செய்ய விஜயகுமார் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறள். சாய்ராம் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராதாகிருஷ்ணன் தயாரிக் கிறார். கதை , திரைக்கதை, வசனம் எழுதி நடனப் பயிற்சியும் கொடுத்து இயக்குகிறார் மாஸ்டர் மஸ்தான். மக்கள் தொடர்பு: விஜயமுரளி, கிளாமர் சத்யா.