தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வியாகவே இருக்கும்.தேர்தலில் நான் வென்றாலும் அது மக்களுக்கான வெற்றியாகவே இருக்கும் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்றார். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். எல்லாருக்கும் ஒரு தலையெழுத்து இருக்கு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால் கொரோனா காலம் என்பதால் நோய்த் தொற்று அபாயம் இருப்பதால் தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன் என்றார். ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமித்த நடிகர் ரஜினிகாந்த். ஜாதி , மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும் என்றார். அண்ணாத்த படத்தை முடித்து தர வேண்டியது என் கடமை என்று கூறினார். பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார் ரஜினிகாந்த்