நாளை வளைய சூரிய கிரகணம். வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று ஜூன் 10 ஏற்படுகிறது.

பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும் நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. ஒரே நேர்க்கோட்டில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது சூரிய ஒளியை நிலவு மறைக்கும். அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அமாவாசையன்று சூரிய கிரகணம் ஏற்படும். நிலவு சூரியனை 90 சதவீதம் மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். பகுதியாக மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. வளையசூரிய கிரகணம் என்பது பூமியில் இருந்து நிலவு அதிக துாரத்தில் இருக்கும் போது ஏற்படுகிறது. அன்று பூமியில் இருந்து 4,04,267 கி.மீ. துாரத்தில் நிலவு இருக்கும். அப்போது சூரியன் வளையம் போன்று தோன்றுவதால் இது வளைய அல்லது கங்கண சூரிய கிரகணம் எனப்படுகிறது. எங்கு தெரியும் கனடா கிரீன்லாந்து சைபீரியா உட்பட வடக்கு ரஷ்யாவில் வளைய சூரிய கிரகணம் தெரியும்.

இந்தியாவில் அருணாச்சலபிரதேசம் லடாக்கில் மட்டும் சூரியன் மறையும் நேரத்தில் தெரியும்.
வளைய சூரிய கிரகணம் 3 நிமிடம் 50 வினாடி நிகழுமாம். எப்போதுசூரிய கிரகண நிகழ்வு இந்திய நேரப்படி மதியம் 1:42க்கு தொடங்கி மாலை 6:41 மணி வரை நடைபெறும்.
எப்படி பார்ப்பது சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.