பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை என அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் 32 பேர் விடுதலையாகின்றனர். 12 பேர் வழக்கு காலத்தில் இறந்தே விட்டனர் என்பது வேறுக்கதை. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில். ‘நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும், அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண்போகக்கூடாது’’ என பதிவிட்டுள்ளார்.