15.06.2021, செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணிக்கு, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ளமுதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுநிறைவைக் (1921-2021)கொண்டாடும் ‘ஜானகிராமம்‘ என்ற நூலைவெளியிட்டார். அப்போது முதல்வர், “தமிழின்தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை. அவரது படைப்புகள்குறித்துப் பல்வேறுதுறையைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலைவெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன்நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவர்க்கும்எனது நன்றிகள்“ என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடிக்குஅருகிலுள்ள ‘தேவங்குடி’ என்ற ஒரு சிறிய கிராமத்தில், தியாகராஜ சாஸ்திரி – நாகலட்சுமி ஆகியோரின்இரண்டாம் மகனாக, 28.06.1921இல்பிறந்த தி.ஜானகிராமன், தமிழின் மகத்தானகலைஞர்களுள் ஒருவர். தி.ஜானகிராமன் மறைந்து(18.11.1982) முப்பத்தொன்பது ஆண்டுகளாகிவிட்டபிறகும், நவீனத் தமிழிலக்கியத்தில் அவர் புகழ்இன்றும் ஓங்கியே இருக்கிறது. அவருடையபுனைகதைகள், தமிழ் வாசகர்களால் இன்றும் விரும்பிவாசிக்கப்படுகின்றன. அகில இந்திய வானொலியின்கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றிஓய்வுபெற்ற தி.ஜானகிராமன், தஞ்சாவூர் மாவட்டமக்களின் வாழ்வியலைக் கலைத்திறத்துடன் தம்படைப்புகளில் பதிவுசெய்த ஒரு முன்னோடிஎழுத்தாளராவார். அவர் எழுத்தில் காவிரியும் இசையும்தஞ்சை மண்ணின் இயற்கை வளமும் டெல்டாமனிதர்களின் வாழ்வியல் கோலங்களும் நுட்பமாகப்பதிவுபெற்றுள்ளன. சாகித்திய அகாதமிவிருது (1979) பெற்ற அமரர் தி.ஜானகிராமனின்(28.06.2021) நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும்நோக்கில், தி.ஜா. ஆய்வாளர் கல்யாணராமன், பல்வேறுஎழுத்தாளர்களிடமிருந்து தி.ஜானகிராமனின்படைப்புகளைப் பற்றிய (102) கட்டுரைகளைப்பெற்று, ‘ஜானகிராமம்‘ என்றதலைப்பில், 1032 பக்கங்களில் ஒரு பெருநூலைத்தொகுத்துள்ளார். இந்நூலைக் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.15.06.2021 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குமுதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்வெளியிட, ‘ஜானகிராமம்‘ நூலின் முதல் பிரதியைத்தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரியின் சார்பாக, ‘விப்ராஸ் ஆட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்திருமதி கெஜலக்ஷ்மி ரகு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், இந்நூலின்தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரித்தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தா.அ.சிரிஷாராமன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.