நேர்கொண்ட பார்வை விமர்சனம் ஷாஜஹான்

பெண்களின் சுகந்திரம் எது என்று உணராமல், கலாச்சாரத்தையும் கண்ணியத்தையும் தொலைத்து நிற்கும் பெண்களின் அவல நிலையை துள்ளியமாக எடுத்துக்காட்டும் படம். ஆணும் பெண்ணும் விரும்பினால் அவர்கள்
யாராக இருந்தாலும் உடல் உறவு வைத்துக் கொள்ளலாம் (விபச்சார கோட்பாட்டுக்குள் வராமல்) என்ற சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை வழிமொழிந்த படமாக நேர்கொண்ட பார்வை இருந்தாலும், அதனால் வரக்கூடிய பாதகங்களை படமாக்கி சுதந்திரம் என்ற பெயரில் சுற்றித்திரியும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அறிவுரைப் பாடம் நடத்தியிருக்கும் இயக்குநர் எச்.வினோத்தை பாராட்ட வேண்டும்.

இந்தக் கதைக்கு நட்சத்திர நடிகர் அஜீத் நடித்திருப்பது அவரின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. சில கருத்துக்களை மக்களால் மதிக்கப்படக்கூடியவர்கள் சொன்னால்தான் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். அந்த வகையில் தவறிழத்த
ஆண்களுக்கும் தவறிவிழுந்த பெண்களுக்கும் இந்தப் படத்தின் வாயிலாக அஜீத் கூறும் நல்ல கருத்துக்கள் பயன்னுள்ளதாக அமையும். தனது 19 வயதிலேயே எனது விருப்பதுடேனேயே ஆண் நண்பனோடு உறவு கொண்டு கன்னித்தன்மையை முதன்முதலாக இழந்தேன். அதைத் தொடர்ந்து இன்னும் சில ஆண் நண்பர்களோடு உடல் உறவு கொண்டு இருக்கின்றேன் என்று திருமணமாகாத கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நீதிமன்றத்தில் நீதிபதி முன் கொஞ்சமும் பயமில்லாமல் கூறுகிறார். (இதற்கு நீதிபதி தண்டனை தர முடியாது. ஏன் என்றால், தீர்ப்பு அப்படி) ஆனால் இதற்கு அஜீத்தின் அறிவுரை அபாரம். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும்
தான் செய்த தவறை மனதால் உணர்ந்து துடிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் உணர்வார்கள் என்பது யதார்த்தமான உண்மை.

                     

உச்சக்கட்ட காட்சியில் நீதிமன்றத்தில் அஜீத் கூறும் “நோ” என்ற ஒரு வார்தைக்குள்
கதைக்கருவின் மொத்த உள்ளடக்கத்தையும் பிரதிபலித்து காட்டிவிடுகிறது. இளம் பெண்களும் ஆண்களும் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை விளக்குகிற படமாக அல்லது பாடாமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் எச்.வினோத். .

அஜீத் தனது நடிப்பில் இமாலய உச்சத்தை தொட்டிருக்கிறார். அவரின் சண்டைக் காட்சி விறுவிறுப்பாக உள்ளது என்பதோடு மட்டுமல்லாமல் அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டியிருக்கிறது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூன்று பேரும் தங்களது கதாபாத்திரத்தை நன்குணர்ந்து நடித்துள்ளார்கள். யுவன் சக்கர் ராஜாவின் இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

சமூதாய அக்கறை கொண்டது நேர்கொண்ட பார்வை.