சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலம், பூக்கடை மாவட்டம், C2 யாணை கவுனி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலி சந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் மகன் சித்தல்குமார் வ/40 ஆகியோரை கடந்த 11.11.2020 ஆம் தேதி 1430 மணி முதல் 1800 மணிக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள் புகுந்து மேற்படி மூன்று நபர்களையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து, சம்மந்தமாக இறந்த தலி சந்த் மகள் பிங்கி என்பவர் கொடுத்த புகார் தொடர்பாக C2 காவல்
நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., சம்பவ இடத்தை பார்வையிட்டு கூடுதல் ஆணையாளர் அருண், இ.கா.ப., மேற்பார்வையில் வடக்கு மண்டலம் இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இ.கா.ப., நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர் மகேஷ்வரன், இ.கா.ப., தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து வந்தனர். காசிமேடு ஆய்வாளர் ஜவகர் தலைமை யிலான தனிப்படையினர் சந்தேக எதிரிகளைத் தேடி விமானம் மூலம் புனே விரைந்து சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் பதிவான சி.சி.டி.வி கேமராப் பதிவின் படி சந்தேக வாகனத்தை கண்டுபிடிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அந்தந்த காவல் துறையினர் உதவியோடு வாகன தணிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேக எதிரிகளான இறந்துபோன சித்தல்குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் மற்றும் அவர்களுடன் வந்த மற்ற நபர்களைத் தேடி தனிப்படையினர் சென்னை, செங்கல்பட்டு, புனே, சோலாப்பூர் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
தனிப்படையினரின் கடும் முயற்சியால் அதிகாலை 3.30 மணிக்கு தனிப்படை ஆய்வாளர் ஜவகர் மற்றும் உதவி ஆய்வாளர் அசோக் மற்றும் சோலாப்பூர் மாவட்ட தனிப்படையினர் இணைந்து சந்தேக வாகனத்தை தேடி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்தை திரும்பிச் சென்று துரத்தியபோது அந்த வாகனம் அதிவேகமாக செல்ல தனிப்படையினர் உயிரை பணயம் வைத்து விரட்டிச் சென்று சந்தேக எதிரியின் வாகனத்தில் மோதி நிறுத்தி வாகனத்தை தணிக்கை செய்த போது புனேவை சேர்ந்த எதிரி கைலாஷ் வ/32 (ஜெயமாலாவின் சகோதரர்) மற்றும் அவருடன் இருந்த கொல்கத்தாவை சேர்ந்த இரவீந்தரநாத் கர், வ/25, மற்றும் விஜய் உத்தம் கமல், வ/28, ஆகியோர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் மேற்கூறிய கொலையைச் செய்ததை ஒப்பு கொண்டதன் அடிப்படையில் அதற்கு பயன்படுத்திய துப்பாக்கி, கார் எண்.UP 16 AH 8340 ஆகிய வாகனம் கைப்பற்றப்பட்டது மீதமுள்ள எதிரிகளை விரைந்து கைது செய்ய ஆவனச் செய்யப்பட்டுள்ளது.