சென்னையில் ஊரடங்கை அமுல்படுத்த காவல்த்துறையினர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டார்கள். 18.05.2021 அன்று பத்திரிக்கையாளர்களிடம் இ-பாஸ் கேட்டு காவல்த்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பத்திரிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். இதை சென்னை பத்திரிகயாளர் சங்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை நகர காவல்த்துறை ஆணையர் சங்கர் ஜியால் பத்திரிக்கையாளர்களுக்கு அரசு வழங்கியிருக்கும் அடையாள அட்டை ஒன்றே போதுமானது என்று காவலர்களுக்கு உத்தரவிட்டார்