சென்னை பெருநகர காவல் சரகத்தில் சட்ட விரோத செயல்களை தடுத்திடவும், உரியகண்காணிப்பு செய்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்யசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்உத்தரவிட்டதின்பேரில், 12 காவல் மாவட்டங்களில் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில்தனிப்படைகள் அமைக்கப்பட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், கட்டப்பஞ்சாயத்துசெய்து மிரட்டி பணம் பறித்தல், ஆட்கடத்துதல், கொலை மற்றும் கொலை முயற்சிகுற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள்மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று (1.6.2021) தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (எ)C.D.மணி என்பவர் ஆயுதங்களுடன் சுற்றி வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியதகவலின் படி, கூடுதல் காவல் ஆணையர் மருத்துவர் திரு.N.கண்ணன், இ.கா.ப அவர்கள்அறிவுரையின் பேரில் இணை ஆணையாளர் கிழக்கு மண்டலம் திரு.வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப (பொறுப்பு தெற்கு மண்டலம்) அவர்கள் கண்காணிப்பில், தி.நகர் காவல் மாவட்டதுணை ஆணையர் மேற்பார்வையில், தி.நகர் காவல் மாவட்ட தனிப்படை காவல் குழுவினர்மேற்கண்ட மணிகண்டன் (எ) C.D.மணி என்பவரை தேடிவந்தனர். மேலும் தொடர்ந்துஅவரது நடமாட்டாத்தை கண்காணித்து கேளம்பாக்கம் வரை சென்று தீவிர தேடுதல் வேட்டைநடத்தினர். மணிகண்டன் (எ) C.D.மணி நேற்று (1.6.2021) இரவு தலைமறைவாகிவிட்டதால், தனிப்படையினர் தொடர்ச்சியாக கண்காணித்து அவரது நடவடிக்கைகள் மூலமாகவும் ரகசியதகவலின் மூலமாகவும் இன்று (2.6.2021) மதியம் போரூர் மேம்பாலம் அருகே தனிப்படைகாவல் குழுவைச்சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் கனகராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் குழுவினர்மணிகண்டன் (எ) C.D.மணி வந்த காரை தடுத்து நிறுத்தி காரின் கண்ணாடியை திறக்க கூறியபோது, காரிலிருந்த பிரபல ரவுடி மணிகண்டன் (எ) C.D.மணி திடீரென துப்பாக்கியால் சுட்டதில், காவல் குழுவிலிருந்த உதவி ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணனின் இடது கை தோள்பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட காவல் குழுவினர் மேற்படி ரவுடி மணிகண்டன் (எ) C.D.மணியை பிடிக்க முற்பட்ட போது, C.D.மணி தப்பிக்க மேம்பாலத்திலிருந்து குதித்தவர் ,கீழே விழுந்ததில் இடது கால் மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டு விழுந்து கிடந்தவரைகாவல் குழுவினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் உதவி ஆய்வாளர்பாலகிருஷ்ணனின் புகாரின் பேரில் R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில்வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.விசாரணையில் மணிகண்டன் (எ) C.D.மணி என்பவர் E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 32 வழக்குகள் உள்ளதும்தெரியவந்தது. இவர் தேனாம்பேட்டை, கோயம்பேடு, கோட்டூர்புரம், கே.கே.நகர், சைதாப்பேட்டை, குமரன் நகர் , எம்.ஜி.ஆர் நகர், சாஸ்திரி நகர், அடையாறு, கானத்தூர், பாண்டிபஜார் , மாம்பலம், பள்ளிக்கரணை, வாலாஜா, செங்கல்பட்டு மற்றும் செவ்வாய்பேட்டை காவல் நிலைய சரகங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு இவர் மீது 10 கொலை வழக்குகள், உட்பட ஆட்கடத்தல், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், மிரட்டி பணம் பறித்தல், கூட்டுக்கொள்ளை, ஆயுத பிரயோகத்துடன் குற்றம் செய்தல் போன்ற குற்ற வழக்குகள்உள்ளது, இதில் 20 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. காயம்பட்ட உதவி ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் இராயப்பேட்டை அரசுமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும்மருத்துவர்களிடம் சிறப்பான சிகிச்சையளிக்கவும் கேட்டுக்கொண்டார். பிடிபட்ட குற்றவாளி மணிகண்டன் (எ) C.D.மணி குறித்தான விசாரணை மற்றும்மருத்துவ சிகிச்சை வழங்கி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திட காவல் துறையினர் நடவடிக்கைஎடுத்து வருகின்றனர்.