அண்ணன், தங்கை பாசத்தை இன்றளவும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் படம், ‘பாசமலர்’. இப்படம் திரைக்கு வந்து (மே 27ல்) 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1961 மே 27ம் தேதி இப்படம் வெளியானது. ஏ.பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்திருந்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.