பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா கைது

பாதிக்கப்பட்ட சுசில்அரி இன்டர்நெஷ்னல் பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் மீது சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவருடைய பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மூன்று வழக்குகளும் தமிழக காவல்துறை இயக்குனரால் மேல் விசாரணைக்காக 13.06.2021 அன்று  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன. சிபிசிஐடி அவ்வழக்குகளை புலன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  ​​புலன் விசாரணையில், காவல் துணை கண்காணிப்பாளர்  
குணவர்மன் தலைமையில் ஒரு சிபிசிஐடி தனிப்படை டெல்லிக்கு விரைந்து சென்று  புலன் விசாரணை செய்து சிவசங்கர் பாபாவை 16.06.2021-அன்று சித்தரஞ்சன் பூங்காவில  கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட பாபாவை டெல்லி கோர்ட்டில் ஆஜர் செய்து சென்னைக்கு கொண்டுவர பயண வாரண்டு பெறப்பட்டுள்ளது. மேற்படி சிவசங்கர் பாபா சென்னை வந்த உடன் மேல்விசாரணை செய்து பின்னர் நீதி மன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்