பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – இரா.முத்தரசன்

பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரும் மோசடி நடந்திருப்பது வெளியாகியுள்ளது. இத்திட்ட த்தை செயல்படுத்திய தொடக்க நிலையிலேயே. உண்மையான விவசாயிகள் விடுபட்டுள்ளனர். ‘போலி விவசாயிகள்’ சேர்க்கப்படுகின்றனர் என்ற புகார் எழுந்தது. அப்போது அரசு புகாரை மறுத் து, அலட்சியப்படுத்தியது. இப்போது 6 லட்சம் போலி விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டத் தில் சேர்க்கப்பட்டிருப்பது. மறைக்க முடியாமல் வெளியாகியுள்ளது. நேர்மையான விசாரணை நடத் தப்பட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் மிகப் பெரும் அளவில் அதிகரிக்கும் என்பதே உண்மை யாகும். அரசின் திட்டத்தை உரியவர்களிடம் சேர்க்க வேண்டிய, சட்டரீதியான கடமைப் பொறுப் புள்ள அதிகாரிகளே, பயிரை மேயும் வேலிகளாகியிருப்பது மிகவும் கேவலமானது. ஆட்சியாளர் கள் ஊழலில் முழ்கி கிடப்பதால், இது அதிகாரிகள் மட்டுமே தன்னிச்சையாக செய்த மோடியாக கருத முடியாது. இது தொடர்பான விசாரணை அதிகாரிகளை பலி கொடுத்து, ஆட்சியாளர்களை காப்பற்றுவதாக அமைந்துவிடக் கூடாது.

இந்த மோசடியில் சம்மந்தப்பட்ட 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப் பதாகவும், 18 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மோசடிக்கு ஊக்கம் கொடுத்த சக்தி எது? இதில் அதிகார மையத்தின் தொடர்புகள் என்ன? என்பது போன்ற பல முனைகளிலும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் பயனடைந்துள்ள விவசாயிகளின் ‘உண்மைத் தன்மை குறித்து’ விரிவாக விசாரிக்க வேண்டும். மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திட்ட நிதி கிடைக்கச் செய்ய வேண்டும். அதிகாரி கள் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை அவர்களிடமே வசூலிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.