பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே தொலைபேசி உரையாடல்

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: இஸ்ரேல் பிரதமர் மேன்மைமிகு பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். யூத புத்தாண்டை முன்னிட்டும், சுக்கோத் என்னும் யூத பண்டிகைக்கும் பிரதமர் நெதன்யாகுவுக்கும் இஸ்ரேலிய மக்களுக்கும் பிரதமர் திரு மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். கொவிட்-19 பெருந்தோற்று குறித்து, குறிப்பாக ஆராய்ச்சி, பரிசோதனை, ஆய்வக வசதிகள் மற்றும் தடுப்பு மருந்து உருவாக்கம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் மதிப்பீடு செய்தனர். இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் மனித குலத்துக்கே நன்மை அளிக்கக்கூடிய வகையில் முக்கிய துறைகளில் இரு நாடுகளும் நெருங்கி இணைந்து பணிபுரிவதன் அவசியத்தை தலைவர்கள் ஒத்துக் கொண்டனர். தண்ணீர், வேளாண்மை, சுகாதாரம், வர்த்தகம், புது நிறுவனங்கள் மற்றும் புதுமைகள் ஆகிய துறைகளில் ஏற்கனவே இரு நாடுகளுக்குள் இருக்கும் ஒத்துழைப்பை பற்றி விவாதித்த அவர்கள், இதை இன்னும் வலுவாக்குவது குறித்து பேசினர். பிராந்திய மற்றும் சர்வதேச சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் குறித்து அவ்வப்போது விவாதிக்கவும், இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய மற்றும் துடிப்புமிக்க கூட்டை மேம்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கவும் தலைவர்கள் ஒத்துக் கொண்டனர்.